அவன் தினமும் தனது வயலுக்குச் சென்று விவசாய வேலைகளைச் செய்து வருவான்.வயலுக்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ் சித்தர் ஒருவர் அமர்ந்திருப்பதைப் தினமும்பார்ப்பான்.அவர் எப்போதுமே கண்
மூடித் தியானத்தில் மூழ்கியிருப்பார். குடியானவன் அவரைத் தினமும் மரியாதை நிமித்தமாக வணங்கிவிட்டு வயலுக்குச் செல்வது வழக்கம்.குடியானவனைப்
போல் அந்தப் பாதை வழியாகச் செல்வோர், சித்தரை வணங்கிவிட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.
சித்தர் தவநிலையில் இல்லாமல் இருந்ததைக் குடியானவன், ஒருநாளும்
பார்த்ததில்லை.ஒரு நாள் சித்தர் கண்களைத் திறந்து தேகப்பியாசம் செய்து
கொண்டிருப்பதைக் குடியானவன் கவனித்தான்.சித்தருக்கு வணக்கம் செலுத்தி
விட்டுச்,"சித்தர் பெருமானே, நீங்கள் கண் திறந்திருப்பதையோ, ஆகாரம் உட்கொள்வதையோ, உறங்குவதையோ,ஓய்வு எடுப்பதையோ இதுவரை நான் பார்த்ததில்லை.எப்படி உங்களால் இப்படி அன்னம் ஆகாரமின்றி,உறக்கமின்றி,
ஓய்வு இல்லாமல் தவ நிலையிலேயே இருக்க முடிகிறது" என்று கேட்டான்.
அதற்குச், சித்தர்," உழவுத் தொழில் செய்து மற்றவர் பசி போக்கும் ஐயனே!,
நான் நெடுங் காலமாக யோகம் பயின்று கொண்டிருக்கிறேன், அதில் 'லம்பிகா' என்ற யோகப் பயிற்சி உண்டு.'லம்பிகா' யோகத்தை அனுசரித்தால், நெடு நாட்கள் வரை உணவு தேவையிருக்காது, நாம் மூச்சு விடுவதைக் கூட மற்றவர்களால் உணர முடியாது" என்று சொன்னார்.
இதைக் கேட்ட குடியானவனுக்கு 'லம்பிகா'யோகம் பயில்வதற்கு ஆர்வம் பிறந்தது.
"சித்தர் பெருமானே!, எனக்கு லம்பிகா யோகம் கற்றுத்தருகிறீர்களா,
கற்றுக்கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறேன்" என்றான்.
இதற்குச் சித்தர் "ஐயனே!, இது ஒரு கடுமையான பயிற்சி, நிறைய பொறுமை வேண்டும், உன்னைப் போன்று இல்லறத்தில் ஈடுபடுவோருக்கு இது அவசியமா என்பதையறியேன்" என்று சொன்னார்.
சித்தர் பல தடவை எடுத்துக் கூறியும் குடியானவன், 'லம்பிகா'யோகம் கற்றுக் கொள்வதில் உறுதியாய் இருந்தான்.
வேறு வழியில்லாமல் சித்தரும் சம்மதம் தெரிவித்துப், பயிற்சியை ஆரம்பித்தார்.சில வருடங்களில் குடியானவன் 'லம்பிகா' யோகம் கற்றுத் தேர்ச்சியடைந்தான்.
தான் பயின்ற 'லம்பிகா' யோகத்தை வீட்டிலேயே செய்ய எண்ணினான்
குடியானவன்.ஒருநாள் வீட்டிற்குள் அமர்ந்து யோக நிலை எய்தி அன்னம்
ஆகாரமின்றி மூச்சில்லாமல் தவ நிலையில் அமர்ந்திருந்தான்.
கணவனைத் தொட்டுப்பார்த்த குடியானவனின் மனைவி அவன் மூச்சிலாமல்
இருப்பதை அறிந்து, கணவன் இறந்துபோனான் என எண்ணினாள்.
உற்றார் உறவினர்களை அழைத்து, இறுதிக் கிரியைகளைச்செய்வதற்கு
குளிப்பாட்டி, வீட்டு வாசலில் அமைக்கபட்டிருந்த இருந்த பாடையில் வைப்பதற்காகக் குடியானவனின் உடலை அவனது நெருங்கிய உறவினர்கள் தூக்கிச் சென்றார்கள்.அப்போது வாசலில்
வைக்கப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலின் முனை குடியானவனின் காலைத் தட்டியது.
உடனே குடியானவன் தவத்திலிருந்து விழித்து எழுந்தான்.
எல்லோரும் ஆச்சர்யப்பட்டர்கள்.குடியானவன் உயிருடன் இருப்பதை
அறிந்த உறவினர்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர்.
சில வருடங்கள் சென்றபின் குடியானவனுக்கு மறுபடியும் 'லம்பிகா' யோகம் பற்றிய எண்ணம் தோன்றியது.
முன்பு போலவே வீட்டின் நடுப் பகுதியில் தவ நிலையில் அமர்ந்தான்.இம்முறையும் குடியானவனின் பேச்சுமுச்சற்ற
நிலையைக் கண்ட மனைவி, கணவன் இறந்து போனான் என
உறவினர்களுக்கு அறிவித்தாள்.உறவினர்களும் இறுதிக்கிரியைகளைச் செய்ய
குடியானவனின் வீட்டில் கூடினார்கள்.
அப்போது பதற்றத்துடன் குடியானவனின் மனைவி ஓடி வந்தாள்.குடியானவனின் உடலைத் தூக்கும் உறவினர்களைப்
பார்த்து அழுது கொண்டே," இம்முறை கயிற்றுக்கட்டிலின் முனை படாமல்
கவனமாக உடலைத் தூக்கிச் செல்லுங்கள், சென்ற
முறை எழுந்தது போல் இம்முறையும் எழுந்துவிடப் போகிறார்" என்றாள்.
"லம்பிகா" யோகம் போன்ற கடுமையானப் பயிற்சி இன்றைய வாழ்க்கை
முறைக்கு அவசியமா? என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பு.
நமது வாழ்வு சிறக்க "உடல் நலத்திற்கு தேவையான எளிமையான உடற்பயிற்சி,
மன நலத்திற்குத் தேவையான தவப் பயிற்சி, உயிர் நலத்திற்கு
தேவையான காயகல்பப் பயிற்சி" இவை மூன்றும் அவசியம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. காயகல்பம் யோகம் பற்றி வேதாத்திரி மகரிஷி,
"முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்தும் வந்தார்கள்.வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும். இரண்டாவதாக இரசவாதம் மூலமாக "முப்பு" என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் "முப்பு" என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடங்கள் 500 வருடங்கள் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.
உயிரினங்களில் சில இயற்கையாகவே 'லம்பிகா' யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும்.'லம்பிகா' யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
உயிரினங்களில் சில இயற்கையாகவே 'லம்பிகா' யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும்.'லம்பிகா' யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.
மனிதர்களில் சிலர் 'லம்பிகா' யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள். அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் 'லம்பிகா' யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல் தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடிய பயிற்சியே 'காயகல்ப யோகம்' “ என்கிறார்.
காயகல்பம் என்பது உணவு முறையோ மருந்தோ அல்ல.அது ஒரு யோகப் பயிற்சிமுறை.
கொசுறு:
நேயாளியின் மனைவியைத் தனியே அழைத்த மருத்துவர், "உங்க கணவருக்கு 'ஹார்ட்அட்டாக்' ஆயிருக்கு, இனிமே ரெம்பக் கவனமா பார்த்துக்கணும், குறிப்பா அதிர்ச்சி தரும் விசயங்களைச் சொல்லக் கூடாது, இனி அவர் அதிக நாள் உயிர் வாழறது உங்க கையிலதான் இருக்கு" என்றார்.
போகும்போது கணவன் கோட்டான், ஆமா, “டாக்டர் உன்கிட்ட தனியா ஏதோ சொன்னாரே அது என்னது? கண்டிப்பா ஏதோ சீரியஸ் விசயமாத்தான் இருக்கும், மறைக்காம சொல்லு”
"ஒண்ணுமில்ல, நீங்க சாகப்போறீங்களாம்"
மேலுள்ள கதை/கட்டுரையை ஒலி வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம் கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.
மேலுள்ள கதை/கட்டுரையை ஒலி வடிவில் கேட்டு மகிழ கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
இக்கதை/கட்டுரை ATBC யில் (Australian Tamil Broadcasting Corporation) திரு.பவராஜா அய்யா அவர்களால் நடாத்தப்படும் "சிந்தனைக் களஞ்சியம்"
எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டதின் மறுபதிவே கீழுள்ள
இணைப்பு. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட அதே சமயம் கைபேசியில் ஒலிப்பதிவு செய்ததால் ஒலியின் தரத்தில் குறைகள் உண்டு, அதற்காக வருந்துகிறோம்.
what a great and purposeful blog. the teachings are simple but very great for our life thank you for this great blog with kind blessings and prayers
ReplyDeleteVanakkam,Vaazhga Valamudan!
ReplyDeleteThanks for your comments,blessings and prayers.Maharishi's teachings are simple but very very powerful and will lead any individuals to self realization.Above blog has addressed only few teachings of Maharishi.
Thanks for your visit and time.Be Blessed!
You can also listen some of above above stories using below youtube link.
http://www.youtube.com/channel/UCgECW7DpM6T24ZeIZHhpdsg
Vaazhga Valamudan
dhinakaran chelliah
Really impressing. The great people has teached us how to live a healthy life
ReplyDeleteBut most of the people are not flowing it.
Really impressing. The great people has teached us how to live a healthy life
ReplyDeleteBut most of the people are not flowing it.
True, thanks for your comments!
ReplyDeleteவாழ்க வளமுடன், உங்களின் அருட்செவை மென்மேலும் உயர வாழ்க வளமுடன்!!
ReplyDeleteI'm Really Happy to Read it. Thankyou for your greatest opportunity for our life. I'm interested to learn Kayakalpam quickly.
ReplyDelete