வழியில் சந்தித்த துறவியும் வியாபாரியும் பேசிக்கொண்டே அந்த ஊரை அடைந்தனர்.இருவரும் பசிக் களைப்புடன் அந்த ஊரில் அன்னதானம் கிடைக்கும் சத்திரத்தை வந்தடைந்தனர்.அன்று பணக்காரர் ஒருவர் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தார்.பழம் முதல் இனிப்பு, வடையென தடபுடல் விருந்து.இவர்கள் சென்ற நேரம் ஒருவருக்குத்தான் சாப்பாடு மீதம் இருந்தது.வியாபாரிக்கு சாப்பாட்டின் மேல் ஆசை வந்தது.வியாபாரி துறவியைப் பார்த்து, "இன்று அமாவாசையாயிற்றே, தாங்கள் பட்டினியாயிருக்க வேண்டாமா?" என்று கேட்டான்.
துறவி மவுனமாக இருந்தார்.
வியாபாரி மட்டும் சாப்பாடை வாங்கிக் கொண்டான். பழம் முதல் இனிப்பு வரை ஒன்றுவிடாது ருசித்து சாப்பிட்டு முடித்தான்.
பிறகு இருவரும் சேர்ந்து பயணத்தை தொடர்ந்தனர். வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது.வியாபாரிக்கு விபரீத ஆசை உதித்தது.மடியில் உள்ள பணம் தண்ணீரில் மூழ்காமல் இருக்க வேண்டுமே?.
தண்ணீர் என்றால் தனக்கு பயம் என தன்னைத் தூக்கிச் செல்லும்படி வியாபாரி துறவியிடம் வேண்டினான்.
அவரும் அப்படியே தூக்கிச் சென்றார்.

பாதி ஆற்றைக் கடந்ததும்,
துறவி வியாபாரியைப் பார்த்து, "உன் மடியில் பணம் இருக்கிறதா?" என்று கேட்டார்.வியாபாரியும், "இருக்கிறது" என்றான்.
"அப்படியா? துறவியாகிய நான் பணத்தைச் சுமக்கக் கூடாதே!" என்று வியாபாரியைத் "தொப்" பென்று தண்ணீரில் போட்டார்.
வியாபாரி உயிர் தப்பிப் பிழைத்தது பெரிய கதை.
ஆசையில்லாமல் உலகில் வாழ முடியாது, ஆசையை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்று வேதாத்திரி மகரிஷி கூறுகிறார்.பிறவிப் பெருங்கடல் நீந்துதல் என்ற இலட்சியத்தை நாம் அடைய வேண்டும் என்பதே ஓர் ஆசைதானே!
ஆசையை அடக்கினால் அடங்காது.உணர்ந்து அதனைப் பிறந்த இடத்திலேயே ஒடுங்கச் செய்ய வேண்டும். தேவையா? வசதி இருக்கிறதா? பின் விளைவு என்ன? என்று ஆராயும் போது நிறைவு செய்யக்கூடாத தீய ஆசைகள் அப்போதே அமைதி பெறும்.பிறந்த இடத்திலேயே அதாவது மனதிலேயே தாமாகவே மாய்ந்துவிடும் என்கிறார்.

கொசுறு:
அந்த நோயாளிகளுக்கு இறப்பதற்கு அரைமணி நேரம்தான் அவகாசம்.
டாக்டர், "உங்கள் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்.
"வேற நல்ல டாக்டரைப் பார்க்கணும் "
அருமையான அற்புதமான படைப்பு. நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி.உணர்வோம்,உயர்வோம்!
ReplyDeletevery interesting to learn intraspection through story
ReplyDeleteThanks for comments Aiya, Vaazhga Valamudan
ReplyDelete