ஆஸ்திரேலிய விவசாயியின் பண்ணையில் சுண்டெலி ஒன்று இருந்தது.
"சமையற்கட்டில் ஒரு எலிஇடுக்கி இருக்கிறது! சமையற்கட்டில் ஒரு எலிஇடுக்கி இருக்கிறது!சமையற்கட்டில்
ஒரு எலிஇடுக்கி இருக்கிறது!"
என பதறியது சுண்டெலி.
ஒரு எலிஇடுக்கி இருக்கிறது!"
என பதறியது சுண்டெலி.
கோழி அதைக் கேட்டுவிட்டு, "அது எனக்காக வைக்கப்பட்டதல்ல. எனக்கென்ன?" என்றது.
சுண்டெலி அங்கிருந்த தன் நண்பன் பன்றியிடம் முறையிட்டது.
பண்ணையின் காளை மாடுதான் அங்கிருந்த பிராணிகளில் பெரியது. அதனிடம் சென்று அழுதது.
காளை மாடோ,"நீ அதில் விழாமல் இருக்க உனக்காக வேண்டுமானால் பிரார்த்திக்கிறேன்.
மற்றபடி அதனால் எனக்கென்ன?" சென்று சொல்லிவிட்டது.
காளை மாடோ,"நீ அதில் விழாமல் இருக்க உனக்காக வேண்டுமானால் பிரார்த்திக்கிறேன்.
மற்றபடி அதனால் எனக்கென்ன?" சென்று சொல்லிவிட்டது.

அன்று இரவு தூங்காமல் சுண்டெலி அழுதுகொண்டும் பயந்துகொண்டும் தன் வளையில் பதுங்கிக்கொண்டிருந்தது.
நள்ளிரவில் படீரென்று ஒரு சப்தம். இடுக்கியில் ஏதோ விழுந்துவிட்டது.
அடுத்த நாள் காலை சமையற்கட்டிற்குள் சென்ற விவசாயியின் மனைவி எலிஇடுக்கியைப் பார்க்கச் சென்றாள். ஆனால் அதில் மாட்டியிருந்தது, ஒரு பாம்பு.வால் மட்டுமே மாட்டிக்கொண்டிருந்ததால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.
விவசாயியின் மனைவி அருகில் வரவும் அவளுடைய காலில் ஒரு போடு போட்டுவிட்டது.
விவசாயி தன்னுடைய மனைவியைப் பாம்பு கடித்துவிட்டதை அறிந்து முதல் உதவி செய்தான்.வைத்தியரிடமும் காட்டி மாற்று மருந்தை உட்கொள்ள வைத்தான்.விவசாயியின் மனைவி அருகில் வரவும் அவளுடைய காலில் ஒரு போடு போட்டுவிட்டது.
வீட்டில் விவசாயியின் மனைவி ரொம்பவும் பலவீனமாகப் படுத்திருந்தாள்.
பக்கத்துப் பண்ணைக் கிழவி சில வேர்களையும் மூலிகைகளையும் கொண்டுவந்தாள்.
கோழியைப் பிடித்து வெட்டி, அதை சூப் வைத்தாள். மூலிகைகளை அதில் போட்டு வேகவைத்து விவசாயி மனைவிக்குக் கொடுத்தாள்.
அவளைப் பார்க்க இஷ்டமித்திர பந்துக்கள் எனப்படும் சுற்றமும் நட்பும் வந்தார்கள்.
வெளியூர் ஆட்களும் அங்கு வந்து தங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவேண்டியிருந்தது.
ஆகவே பன்றியை அடித்தார்கள்.

பிரட்டல், வறுவல், அது, இது என்று ஆக்கி வைத்துக்கொண்டு எல்லாரும் சாப்பிட்டார்கள்.
விவசாயி தன்னுடைய மனைவி நலமாக ஆகவேண்டும் என்று வேண்டுதல் செய்துகொண்டான்.
சீக்கிரமே மனைவி நலமாகினாள்.
ஆகவே ஊரையே கூட்டி அழைத்து ஒரு பெரிய நன்றி காட்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்தான்.
அவர்களுடைய வழக்கம் அது.
காளை மாட்டை அடித்தார்கள். அதுதான் அந்த வந்தனை செய்யும் விருந்தின் முக்கிய அயிட்டம்.
அவர்களுடைய வழக்கம் அது.
காளை மாட்டை அடித்தார்கள். அதுதான் அந்த வந்தனை செய்யும் விருந்தின் முக்கிய அயிட்டம்.

இது அத்தனையையும் தன்னுடைய வளையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது அந்த சின்னஞ் சிறிய சுண்டெலி.
எது நடந்தாலும் நமக்கென்ன,யார் எப்படி கஷ்டம் அனுபவித்தால் நமக்கென்ன,
யார் இறந்தால் நமக்கென்ன, நானும் என் குடும்பமும் சுபிட்சமாக வாழ்ந்தால் போதும்
என்று சமுதாயக் கடமையுணர்வே இல்லாமல் இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு அவன் சார்ந்த குடும்பத்திற்கும்,சமுதாயத்திற்கும், உலகிற்கும் தக்க விளைவை ஏற்படுத்தும்.
இதையே வேதாத்திரி மகரிஷி
"ஒவ்வொரு தனி நபரும், பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், அறிவியல் ஆகிய பல்வேறு கோணங்களிலே இந்தப் பரந்த உலகத்தோடு ஒரு இடைவிடாத தொடர்பை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார். யாராவது ஒரு தனி நபர் இத்தகைய அறிவு விளக்கத்திலோ அல்லது வாழ்க்கை ஒழுக்கத்திலோ பின்தங்கி இருப்பாரானால், அது தொடர் நிகழ்ச்சி போல குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அளவில் மனித குலத்துக்குப் பெரிய அளவில் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
ஆகவே, உலகில் வாழும் ஒவ்வொருவரின் நலத்திற்காகவும், மனித சமுதாயம் முழுவதும் அறிவு வளமும், மன வளமும், உடல் நலமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். உலக சகோதரத்துவம் (Universal Brotherhood) என்பது ஒரு பேச்சளவில் இருக்கிற கொள்கையாக இருக்கக் கூடாது. அது மெய்ஞ்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும், சிந்தனையாளர்களாலும் வரையறுத்துச் சொல்லப்பட்ட உண்மை உணர்வாக இருக்க வேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருடைய அனுபவ அறிவாக அறிவாட்சித் தரமாக அமைய வேண்டும்" என்கிறார்.
கொசுறு:
"விக்கல்" வந்தால் நினைப்பார்கள் ......
"சிக்கல்" வந்தால் மறப்பார்கள்.....
"மக்கள்" உணர்ந்தால் மாறுவார்கள்.....(மேலுள்ள கதையையும்...!)
No comments:
Post a Comment