நீண்ட நாள் வாழ வழி என்ன என்று நண்பனிடம் கேட்டான் திருவாத்தான்.சதுரகிரி மலையில் நூற்றாண்டுகளைக் கடந்து பல சாதுக்களும் சன்யாசிகளும் வாழ்கிறார்கள், அவர்களைச் சந்தித்தால்
நீண்ட நாள் வாழும் இரகசியத்தைச் சொல்வார்கள் என்று யோசனை சொன்னான் நண்பன்.
நண்பனின் யோசனைப்படி சதுரகிரி மலைக்குச் சென்றான் திருவாத்தான்.அடிவாரத்திலேயே ஒரு சாதுவைக் கண்டு,அவர் வயது நூறு என்று தெரிந்து அதிசயித்தான்.தனக்கு உள்ள ஆசையைக் கூறி அவரிடம் தனக்கு அவர் கடைபிடிக்கும் ரகசியத்தை சொல்லுமாறு வேண்டினான்.
தான் பால் மட்டுமே அருந்தி தன் வாழ்வை நீட்டித்ததாகச் சொன்னார்,
அப்படியா!, என்றவாறே இன்னும் கொஞ்சம் மேலே ஏறி சென்றான்
மலை மீது ஏறியவுடன் பார்த்ததில் ஆச்சரியம் அதிகரிக்கக் கண்டான்
திருவாத்தான்.அந்தச் சாதுவிற்கு வயது நூற்றி இருபது! அவர் தான் பால் மட்டுமே அருந்தி தன் வாழ்வை நீட்டித்ததாகச் சொன்னார்,

மலை மீது ஏறியவுடன் பார்த்ததில் ஆச்சரியம் அதிகரிக்கக் கண்டான்
எப்போதும் இலைகளை மட்டும் உண்பதாகக் கூறினார்.

அப்படியா!, என்றவாறே இன்னும் கொஞ்சம் ஏறிச் செல்ல, அங்கு இன்னுமொரு வயது முதிர்ந்த சாதுவைக் கண்டு,அவர் வயது அதிகமோ எனறு கேட்க,அவர் தன் வயது நூற்றி ஐம்பது என்று சொல்லி,எப்போதும் கனிகளை மட்டும் உண்பதாக கூறினார்
அப்படியா!, என்றவாறே இன்னும் கொஞ்சம் மேலே ஏறி சென்றான் திருவாத்தான்.மலை மீது ஏறியவுடன் பார்த்ததில் அங்கு ஒரு சாது
மிகவும் அதிக வயதாகத் தோற்றம் அளித்து நித்திரையில் இருந்தார்,இருநூறு வயதேனும் இவருக்கு இருக்கும் என்று ஒருவாறு நிர்ணயித்து , நித்திரையை கலைத்தால் அவர் கோபப்பட்டு ரகசியத்தை சொல்லாமல் இருந்துவிடுவார் என்று எண்ணி அமைதியாக சுற்றும் முற்றும்
பார்த்தான் திருவாத்தான்.

பல மது பாட்டில்கள், சிகரெட், கஞ்சா வகைகள் பல கிடப்பதை பார்த்து ஆச்சிரியம் கொண்டு அவர் நித்திரை கலைந்ததும் தீய வழக்கமென
ஒதுக்குவதை எல்லாம் நீ, எப்படி நீங்கள் இரு நூறு ஆண்டு வாழ்கிறீர்கள்
என்று கேட்க, கோபக்கனல் பறந்திட அவர் சொன்னார்,
"என்ன, நக்கலா எனக்கு வயது முப்பதுதான் ஆகிறது ஒடிப்போ... இல்லையென்றால் உன்னைக் கொன்று விடுவேன்!"
அதிக நாள் உயிர் வாழ மகரிஷி வழங்கிய "காயகல்ப பயிற்சி" நம்மில் பலரும் அறிந்ததே.காயகல்ப பயிற்சி என்பது
உணவு முறையோ,மூலிகையோ,லேகியமோ அல்ல.
காயகல்ப பயிற்சி பற்றி மகரிஷி குறிப்பிடும்போது " நாம் உண்ணும் உணவு.
1.ரசம்,2.ரத்தம்,3.சதை,4.கொழுப்பு,5.எலும்பு,6.மஜ்ஜை மற்றும் 7.சுக்கிலம்
என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்."
கொசுறு :
"ரொம்ப நாள் உயிர் வாழ என்ன வழி சாமி?"
"அதுக்கு நீ சாகாம இருக்கணும்."
***காயகல்பம் பற்றிய கதை விரைவில்!***
No comments:
Post a Comment