Sunday, 2 December 2012

செயல் விளைவுத் தத்துவம்!(Cause and Effect)

முன் ஒரு காலத்தில் சீன தேசத்தில் “ஆ_மி” என்ற ஒரு பெண் புதிதாக திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போனாள், அங்கு கணவருடன் ஒரே ஒரு மாமியாரும் இருந்தார். சிறிது காலம் கடந்தது ஆ_மிக்கு மாமியாரின் குணம், அவர் நடந்து கொள்ளும் முறை பிடிக்கவில்லை. அதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. நாட்கள், வாரங்கள் உருண்டோடின மேலும் ஆமியின் மாமியார் மருமகளை அடிக்கடி விடைக்க தொடங்கினார்.ஆ_மி யால் மாமியாரிடம் வாக்குவாதம் செய்வதையோ, சண்டை போடுவதையோ நிறுத்த முடியவில்லை. சீன வழக்கதின் படி ஆ_மி தினமும் மாமியாருக்கு குனிந்து வணக்கம் சொல்லவேண்டும். அவர் சொல்வதை எல்லாம் தாழ்பணிந்து கேட்கவேண்டும். அது ஆ_மிக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தந்தது. இருதலைக்  கொள்ளி எறும்பு போல் ஆ_மியின் கணவர் தவித்தார்.கடைசியில் ஆ_மியினால் மாமியாரின் சர்வாதிகார தனத்தை பொறுக்கமுடியவில்லை. அதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். தனது தந்தையின் நண்பர், மூலிகை மருத்துவரான ”ஷுஷு” என்பவரை பார்த்து, அவரிடம் இருந்து ஏதாவது மூலிகை வாங்கிவந்து, தன் மாமியாருக்கு கொடுத்தால் தன் பிரச்சனை ஓரே அடியாக தீர்ந்துவிடும் என்று.
அவள் ஷுஷுவை சந்தித்து விஷயத்தை சொன்னதும், அவரும் தன் நண்பனின் மகளுக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார். ஆ_மியும் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். ஷுஷு உள்ளே சென்று சில மூலிகைகளை எடுத்து வந்து ஆ_மியிடம் கொடுத்துவிட்டு சொன்னார். நிபந்தனையை  சொன்னார் இபோது உடனே செயல்படும் மருந்து கொடுத்தால் உன் மாமியார் உடனே இறந்து விடுவாங்க அதனால் எல்லோருக்கும் உன்மேல் சந்தேகம் வரும். இது மெதுவாக வேலை செய்யும் விஷம் இதை மாமியார் சாப்பாட்டில் கலந்துவிடு. அவங்களை மகா ராணி மாதிரி பாத்துக்க,  அப்பதான் நீ நல்லா சமைச்சு மாமியாருக்கு போடறதா ஊர் ஜனம் நம்பும். உன்மேல் சந்தேகப்  பட மாட்டாங்க! அதே போல் இனி உன் மாமியாரிடம் சண்டையிடக் கூடாது. மீறி சண்டையிட்டால் மாமியார் இறந்தவுடன் உன்மேல் சந்தேகம் வந்துவிடும் என்று சொன்னார். ஆ_மியும் மிக சந்தோஷமா நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தாள்.
ஆ_மியும், ஷுஷு சொன்னதைவிட யாருக்கும் சந்தேகமே வராதபடிக்கு மாமியாரை நன்கு கவனித்துக்  கொண்டாள். இப்படி ஆறு மாதங்கள் உருண்டோடி விட்டது.

இப்போ ஆ_மியும் மாமியாரும் மிக நெருக்கமான நண்பிகளாகி விட்டனர். ஊரே இப்படி போல் ஒர் மாமியார் மருமகள் இருக்க முடியுமா என்று அவர்களை உதாரணம் காட்டியது. ஆ_மியின் கணவரும் இருவரின் ஒற்றுமயைப்  பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார். அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து இருக்கும் போது ஒர் அழகான குழந்தையும் ஆ_மிக்குப்  பிறந்தது. ஆ_மி, கணவன், மாமியார் அனைவரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். அப்போது ஆ_மிக்குக்  குற்ற உணர்வு உறுத்த ஆரம்பித்து விட்டது. இவ்வள்வு ந்ல்ல மாமியாரை கொல்ல விஷம் கொடுத்து வருகிறோமே என்று வருந்த ஆரம்ப்பித்தாள். மன கஷ்டம் தாங்கமுடியாமல் மீண்டும் ஷுஷுவிடம் சென்று தன் மாமியார் திருந்தி விட்டதாகவும், தான் செய்த தவறையும் சொல்லி அழுதாள்.

திரு ஷுஷு சிரித்து கொண்டே ஆ_மியிடம் சொன்னார், ஆ_மி நான் உன் மாமியாருக்கு கொடுத்தது விஷம் அல்ல அது வைட்டமின் மூலிகைகள், விஷம் உன் மனதில்தான் இருந்தது இப்போது அது இல்லை. நீ என்ன அடுத்தவர்களுக்கு கொடுக்கிறாயோ அது தான் திரும்பி உன்னிடம் வரும். நீ முதலில் மாமியாரிடம் வெறுப்பு, சினம் காட்டினாய் அதுவே உன்னிடம் திரும்பி வந்தது. பின் அன்பும் அரவணைப்பும் காட்டினாய் அது இப்போது திரும்பி வருகிறது என்றார்.
ஆ_மியும் சந்தோஷமாக வீடு திரும்பினாள்.

"இயற்கை நியதியை அறியாமலோ, அலட்சியம் செய்தோ, உணர்ச்சி வயப்பட்டோ மனிதன் செயலாற்றும் போது ஏற்படும் விளைவுகள் தான் துன்பங்கள், பொருளிழப்பு, ஏழ்மை, நோய்கள், உறுப்பிழப்பு, அகால மரணம் ஆகிய அனைத்துக் கேடுகளுமாகும். செயல்-விளைவுத் தத்துவத்தில் முதல்பாடம் இதுவே"

"செயல் விளைவு தத்துவத்தை 'இறை நீதி' என்று கருத்தில் கொள்ள வேண்டும்"  என்கிறார்  மகரிஷி.

கொசுறு:
எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உன்னைப் பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?
ந‌ல்லா இரு‌க்கே‌ன்டி..
எ‌ப்போ பா‌த்தாலு‌ம் உ‌ன் மாமியாரோட  ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பாயே....இ‌ப்போவு‌ம் அ‌ப்படியே‌தா‌ன் இரு‌க்‌கியா?
‌இ‌ல்லடி.... இ‌ப்போ‌ல்லா‌ம் ச‌ண்டை போடுறதே இ‌ல்லை.
அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?
‌இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!

No comments:

Post a Comment