திருடனைப் பார்த்த துறவி பயப்படவில்லை. பதறவில்லை. ‘உனக்கு என்ன வேணுமோ, எடுத்துக்கோப்பா!’ என்று சொல்லிவிட்டார்.
இதைக் கேட்ட திருடனுக்கு ஆச்சர்யம். ஆனால் அதற்காக வலியக் கிடைப்பதை விடமுடியுமா? கண்ணில் பட்ட ஓரிரு பொருளையும் விடாமல் சுருட்டிக்கொண்டு கிளம்பினான்.
அவன் புறப்படும் நேரம், துறவி அவனை அழைத்தார். ‘கொஞ்சம் பொறுப்பா!’
‘என்ன சாமி? போலிஸைக் கூப்பிடப்போறீங்களா?’
‘அதெல்லாம் இல்லை என்கிட்டேயிருந்த பொருளையெல்லாம் எடுத்துகிட்டுப் போறியே, எனக்கு கொடுப்பதற்கு உன்னிடம் ஒன்றும் இல்லையா?'
நன்றி ஒன்றுதான் இப்போதைக்கு உங்களுக்கு சொல்லமுடியும்.ரொம்ப நன்றி!’ என்றான் திருடன். சொல்லிவிட்டு ஓடி மறைந்துவிட்டான்.
சில நாள்கள் கழித்து, போலிஸ் அந்தத் திருடனைப் பிடித்துவிட்டது. அவன்மீது வழக்குத் தொடுத்தார்கள். சாட்சி சொல்ல துறவியை அழைத்தார்கள். அவரும் வந்தார்.
நீதிபதிமுன் நின்றார். ‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.
நீதிபதிமுன் நின்றார். ‘ஐயா, இந்த இளைஞனை எனக்குத் தெரியும். ஆனால் இவன் திருடன் இல்லை!’ என்றார்.
‘இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த
வரை நான் இவனுக்குச் சில பொருள்களைக் கொடுத்தேன். அவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான். கணக்கு சரியாகிவிட்டது!’ என்றார்.
"ஒரு பிடி உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு, உழைப்பினால் பதில் உலகத்திற்குத் தந்திடு"
- இது மகரிஷியின் வாக்கு.
ஒரு பிடி உணவில் எத்தனையோ பேரின் உழைப்பை உணர்ந்திடலாம். இதில் உழவுத் தொழில் புரியும் விவசாயி முதல், தொழிலாளர், கடைக்கு சேர்க்கும் வியாபாரி, சமைத்து அளிக்கும் அன்னை, மனைவி அனைவருமே அடக்கம்(இது ஒரு சங்கிலித்தொடர் - இதில் உள்ளவர்களின் பட்டியல் நீளம் மிகப் பெரியது ). தவம் இயற்றும் போதும் உணவு உண்ணும்போதும் இவர்கள் அனைவரையும் நினைந்து நன்றி உணர்வுடன் வாழ்த்துக் கூறுவோம்!.
கொசுறு:
'நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே....?’
'ஹி...ஹி...ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்...?’
'அதுக்கில்லேங்க.......பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே..அதை நீங்க எடுத்தீங்களா?’
No comments:
Post a Comment